உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பாதிப்பு 71ஆக அதிகரிப்பு!

புதன் சனவரி 06, 2021

பிரிட்டனிலிருந்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால், இன்று இந்தியாவில் அதன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், மேலும் 13 பேருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 

பிரிட்டனில் இந்த வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்த, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அந்நாட்டு அரசாங்கம் மீண்டும் ஊரடங்கை கொண்டு வந்துள்ளது. மேலும் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தையும் பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இந்தியாவும் பிரிட்டனுக்கு 6-ம் தேதி வரை விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.

பிரிட்டன் தவிர்த்து உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்க கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.