உருமாறிய கொரோனா வைரஸ்! இரண்டு நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை- மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய் சனவரி 19, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. தமிழகத்தில் கூட ஒருவருக்கு இந்தப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் யாருக்கும் உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

மேலும் இந்தியாவில் உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறையில் சிகிச்சையளிப்பட்டு வருகிறது.