உறுப்பினரை பெயரிடுவதில் தொடர்ந்தும் தாமதம்

வியாழன் ஓகஸ்ட் 13, 2020

தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என எங்கள் மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உறுப்பினரை பெயரிடுவது தொடர்பில், சட்ட ஆலோசனை பெறுவதாக கட்சியின் ஆலோசகர் பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துரலிய ரத்தன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான எங்கள் மக்கள் சக்திக்கு இம்முறை ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

ஆனால் கட்சியின் செயலாளரான தேரர் தற்போது தலைமறைவாகியுள்ளமையால் அந்த ஆசனத்திற்கான உறுப்பினரை பெயரிடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி 9 ஆவது நாடாளுமன்றம் கூடவுள்ளது.