ஊடகவியலாளர் தரிஷாவின் மடிக்கணனியை ஆய்வு செய்க!

செவ்வாய் ஜூன் 16, 2020

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியை  (லப்டொப்பை )ஆய்வு செய்யவும், ஜூன் 4 – 16ம் திகதிக்குள் லப்டொப்பில் மாற்றம் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்யவும் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு மஜிஸ்திரேட் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தரிஷா சார்பில் ஆஜரான சட்டத்தரணி, லப்டொப் கைப்பற்றப்பட்ட திகதியில் இருந்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட திகதிக்கும் இடையில் தரவுகள் சேதமாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து ஜூன் 4ம் திகதி முதல் நீதிமன்றில் சமர்ப்பித்த இன்றைய தினம் வரையில் மாற்றங்கள் செய்யப்பட்டதா என்பதை கண்டறிய நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் லப்டொப் கைப்பற்றப்பட்ட திகதியை உறுதி செய்ய தரிஷாவின் மாமாவை ஜூலை 21ம் திகதி நீதிமன்றில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.