ஊடகவியலாளரை அச்சுறுத்திய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரினார்

ஞாயிறு ஜூலை 12, 2020

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தி அவரை அச்சுறுத்தி இழுத்து சென்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ மன்னிப்புக் கோரியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடர்பிலான வழக்கின் பிரதிவாதியான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக முன்னாள் பொலிஸ் பாnறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ தன்னை படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளரின் கடமைக்கு அவர் இடையூறு விளைவித்து அவரை இழுத்து சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே அதற்காக மன்னிப்புக் கோருவதாக நியோமல் ரங்கஜீவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர் மீது குறித்த ஊடகவியலாளர் மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகிய முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.