ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் நாளை!

வியாழன் மார்ச் 14, 2019

ஊடக அமைச்சினால் வருடாந்தம் வழங்கப்படும் அஸிதிஸி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளருக்கு புலமைப்பரிசில்கள் நாளை வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. 

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளனர்.