ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; உடனடி விசாரணை வேண்டும்

சனி ஜூலை 11, 2020

 கொழும்பு புதுக்கடை நீதிமன்ற  வளாகத்தில்  காவல் துறை  அதிகாரியென அறியப்படும் ஒருவர் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக சென்றிருந்த போது, அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்திடம் அடையாள அட்டையொன்றை பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர் என்பதால் அவரின் பணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாதென சகல தரப்புகளுக்கும் அறிவுருத்தப்பட்டிருக்கிறது.

இருப்பினும், மேற்படி அச்சுறுத்தல் காரணமாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையில் அறிவுருத்தப்பட்டிருக்கும் விடயம் மீறப்பட்டுள்ளதென அரசாங்க தகவல் தி​ணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனால் மேற்படி சம்வம் தொடர்பாக உடனடியாக பக்கசார்ப்பற்ற விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தகவல் திணைக்களம் கோரியுள்ளது.