உடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில வினோதமான அறிகுறிகள்!

வெள்ளி ஓகஸ்ட் 30, 2019

சில அறிகுறிகள் உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகள் என்றே நாம் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுவோம். பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

சில அறிகுறிகள் உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகள் என்றே நாம் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுவோம். பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே அத்தகைய அறிகுறிகளை பார்ப்போம்.

* முயற்சி எடுக்காமல் திடீரென உடல் எடை குறைந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* அசிடிடி போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் பல் எனாமல் தேய்ந்து விடுவது. மற்றும் அதிக அசிடிடி, பல் பின்புற எனாமல் தேய்வது, இருமல், தீரா தொண்டை பிரச்சினை, துர்நாற்றமுள்ள வாய் இவையும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.

* அடிக்கடி சிறுநீர் செல்லுதல் (அ) குறைந்த அளவு சிறுநீர், மலச்சிக்கல்(அ) அடிக்கடி வயிற்றுப்போக்கு இவற்றுக்கு கவனம் அளிக்க வேண்டும்.

* ஆசன வாயில் புண், சதை வெளிவருதல்.

* கையெழுத்து மாறுபடுதல்.

* தீரா இருமல்

* அதிக சத்தமான குறட்டை 

* ஈறுகள் வீக்கள்

ஆகியவை உடனடியாக மருத்துவ கவனம் கொடுக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும்.