உடல்நலம் காக்கும் மத்திய தரைக்கடல் உணவுகள்!

புதன் பெப்ரவரி 06, 2019

மத்திய தரைக்கடல் உணவுமுறைப்படி உணவு உட்கொள்வதால் இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

மத்திய தரைக்கடல் பகுதி உணவுமுறை (மெடிட்டரேனியன் டயட்), உடல்நலம் காக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கமான மத்திய தரைக்கடல் உணவு முறையில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானியப் பொருட்கள் அடங்கியிருக்கும்.


சமீபத்திய ஆய்வுகளின்படி, மனச்சோர்வைக் குறைக்க இந்த உணவுமுறை உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிட்டரேனியன் டயட் என்றால் என்ன? அது எப்படி உங்களுக்கு உதவும் என்பது தெரியுமா?

வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானியப் பொருட்கள் அடங்கியிருக்கும். உதாரணமாக, முழுத் தானிய பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி ஆகியவற்றைக் கூறலாம்.

மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் ஒன்று சேரும்போது உடல்நலனுக்கு நல்லது என்கிறார், இங்கிலாந்து இதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகரான விக்டோரியா டெய்லர்.

மத்திய தரைக்கடல் உணவுமுறைப்படி உணவு உட்கொள்வதால் இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், இந்த உணவுமுறையைப் பின்பற்றினால், நீண்ட ஆயுளுடன், உடல் எடை கூடாமல் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.