உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிப்பு!!

சனி மே 21, 2022

நுளம்பு பெருக்கம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, île-de-France மாகாணம் முழுவதும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 1 ஆம் திகதியில் இருந்து பிரான்சில் 66 மாவட்டங்களுக்கு சுகாதார அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதில் தலைநகர் பரிஸ் உட்பட île-de-France மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.

புலி நுளம்பு (tiger mosquitoes) என அழைக்கப்பட்டும் இராட்சத நுளம்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.குறித்த மாவட்டங்களுக்கு சிவப்பு வகைக்குட்பட்ட அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.