உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பொறுப்பு கூறவேண்டியவர்களை நீதியின் முன் கொண்டுவர கோரிக்கை!

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான சூழ்நிலை குறித்து ஆராயப்பட்டவை தொடர்பான இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை இன்று (13) வௌியிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் நீதி நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதோடு, இதற்கு பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.