உயிர்வாழத் தகுதியான புதிய கிரகம் கண்டுபிடிப்பு:

திங்கள் சனவரி 13, 2020

நாசாவில் பயிற்சி மாணவர் ஒருவரின் துணையோடு உயிர்வாழத் தகுதியான புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் வின்வெளி ஆய்வுமையமான நாசா அறிவித்துள்ளது.

நாசா கடந்த வாரம் தனது டிரான்ஸிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) ஒரு கிரகத்தை வாழக்கூடிய மண்டலத்தில் கண்டுபிடித்ததாக அறிவித்தது, கிரகத்தின் பரப்பளவு மற்றும் அதன் மற்ற நிலமைகளை கணக்கிட்டால் அங்கு கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் நாசா தெரிவித்தது. உண்மையில் இது மட்டுமே ஓர் அதிசயமல்ல... கூடவே நாசா தெரிவித்த இன்னொரு செய்திதான் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

பிளானட் ஹண்டர்ஸ் டெஸ் குடிமகன் அறிவியல் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த குக்கியர் என்ற மாணவரின் அரிய கண்டுபிடிப்பு இது என்றும் நாசா நேர்மையாக கூறியுள்ளது.

நாசாவில் மூன்று நாள் பயிற்சிப் பயிலரங்கிற்காக வந்தவர்தான் குக்கியர். இவர் நியூயார்க்கில் உள்ள ஸ்கார்ஸ்டேல் உயர்நிலைப் பள்ளியில் தனது ஜுனியர் ஆண்டை முடித்தபின் மேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் கோடைகால பயிற்சியாளராக சேர்ந்தார்.

அதன் ஒரு பகுதியாகத்தான் குக்கியர் நாசாவுக்கு வந்தார். தனது மூன்று நாள் பயிற்சிப் பயிலரங்கில், 17 வயதான குக்கியர் தான் வரலாற்றை உருவாக்கப் போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அவரது ஆர்வத்தையும் திறமையையும் உணர்ந்த நாசா விஞ்ஞானிகள் அவரிடம் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) எனும் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் உபகரணத்தையே அளித்தனர். வழக்கமாக மாணவர்கள் தங்கள் பயிற்சிக்காக அதிசயமாக கையாளும் கருவியாகத்தான் அது இருக்கும். ஆனால் குக்கியர் அக்கருவியைக் கொண்டு தீவிரமான ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப் போகிறார் என்பதை நாசா விஞ்ஞானிகளும் அப்போது அறிந்திருக்கவில்லை.

குக்கியரிடம் வழங்கப்பட்ட டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) என்பது நாசாவின் ஆய்வுப்பயணத் திட்டத்திற்கான ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும், இது கெப்ளர் மிஷனால் மூடப்பட்டதை விட 400 மடங்கு பெரிய பகுதியில் போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி புதிய அல்லது ஆய்வுக்குரிய எக்ஸோப்ளானெட்டுகளைத் தேட வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளானட் ஹண்டர்ஸ் டெஸ் குடிமகன் அறிவியல் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த குக்கியர் பதிவேற்றப்பட்ட நட்சத்திர ஒளியின் மாறுபாடுகளை ஆராய்வதே அவரது வேலை. அதன்படி தொடர்ந்து வானைநோக்கி பார்த்துக்கொண்டிருந்த குக்கியருக்கு புதிய புதிய உலகங்கள் விரியத் தொடங்கின.

நாசாவின் கூற்றுப்படி, குக்கியர் கண்டுபிடித்த புதிய கிரகம் TOI 1338 b பூமியை விட 6.9 மடங்கு பெரியது மற்றும் பூமியிலிருந்து 1,300 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் நட்சத்திரங்களைப் போலவே கிட்டத்தட்ட ஒரே வட்டப்பாதையில் சுற்றுகிறது, எனவே இது வழக்கமான நட்சத்திர கிரகணங்களை பெறுகிறது.

நட்சத்திர மண்டலத்தில் உயிர் வாழத் தகுதியுடைய பூமி போன்ற ஒரு கிரகம் இருப்பதைக் கண்டறிய நாசாவுக்கு குக்கியர் உதவியுள்ளார் என்பது மிகவும் பெருமைக்குரியது என்று நாசா புகழ்ந்துள்ளது.

இதுகுறித்து என்பிசி 4 நியூயார்க் ஊடகத்திடம் பேசிய நாசா பயிற்சி மாணவர் குக்கியர் கூறியதாவது:

" சில தரவுகளுக்காக வேண்டி, அவர்கள் அளித்த கருவியின்மூலம தன்னார்வலர்கள் ஒரு கிரகண பைனரி என அடையாளமிடப்பட்ட எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போதுதான் வானமண்டலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றையொன்று வட்டமிட்டதைக் காணமுடிந்தது. எங்கள் பார்வையில் இருந்து ஒவ்வொரு சுற்றுப்பாதையையும் ஒன்றுக்கொன்று மறைப்பு வேலையைச் செய்துகொண்டிருந்தது தெரிந்தது.

என் மூன்று நாட்களின் பயிலரங்கில், TOI 1338 என்ற அமைப்பிலிருந்து ஒரு சமிக்ஞையைக் கண்டேன். முதலில் இது ஒரு நட்சத்திர கிரகணம் என்று நினைத்தேன், பின்னர்தான் இது ஒரு புதிய கோள் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.

இவ்வாறு நாசா பயிற்சி மாணவர் குக்கியர் தெரிவித்தார்.