வைகோ மருத்துவமனையில் அனுமதி!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019

மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
உடல்நல குறைவால் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தேனியில் வைகோ தலைமையில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
 20,21,22 தேனியில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் மருத்துவரின் ஆலோசனைபடி வைகோ ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் இந்த பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.