வைத்தியசாலைக்குள் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

திங்கள் அக்டோபர் 21, 2019

வவுனியா, செட்டிகுளம் பொதுவைத்தியசாலைக்குள் இளைஞர் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
 

குறித்த இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை பிரிவில் தங்கி நின்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வைத்தியசாலையின் மலசலகூடத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் சில காலமாக  மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், அதற்காக வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

சம்பவத்தில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 33 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் காவல் துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.