வாக்குச்சீட்டுக்கள் இன்று தபாலுக்கு அனுப்படும்
சனி ஜூலை 11, 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்கள் இன்று முதல் எதிர்வரும் 13 வரையில் படிப்படியாக தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதென தேர்தல்களை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்பாக வாக்குச்சீட்டு விநியோக பணிகள் அனைத்தும் முற்றுப்பெறுமென்றும், அதற்கு முன்பாக காரியாலங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியமெனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும் இம்முமறை நாடாளுமன்ற தேர்தலுக்காக தபால் வாக்குகளை பதிவுச் செய்யும் பணிகள் 14,15,16,17 ஆம் திகதிகளின் முன்னெடுக்கப்பட உள்ளனவெனவும், அவற்றில் 14,15 ஆம் திகதிகளில் அரச திணைக்கள் ஊழியர்கள் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.