வாக்குகள் எண்ணும் பணி யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறுகின்றது

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

இன்று காலை 7 மணிக்கு தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்குப் ஏனைய வாக்குகள் எண்ணும் பணியும் ஆரம்பாகியது.

யாழ்ப்பாணத்தில் 73 சாதாரண வாக்குகள் எண்ணும் நிலையங்களும் 16 தபால்மூல வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெறுகிறது.

தேர்தலில் போட்டியிட்ட அரசியல்வாதிகளும் வாக்களித்த மக்களும் தமது முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.