வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

வாகனங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதென, வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணமென, வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ஜிகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஓர் இலட்சத்திலிருந்து 5 இலட்சம் வரை வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.