வாட்ஸ்-அப் பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? டெல்லி உயர்நீதிமன்றம்-

திங்கள் சனவரி 18, 2021

வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் தனிநபர் கொள்கையை மாற்றி வெளியிட்டது. இதனால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பல பேர் வாட்ஸ்-அப் செயலியில் இருந்து "டெலிகிராம்" "சிக்னல்" "வைபர்" போன்ற செயலிகளில் மாறினார்.

இந்த புதிய தனிநபர் கொள்கைக்கு எதிராக வாட்ஸ் அப் - ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வாட்ஸ்-அப் தனிப்பட்ட செயலி என்பதால் அதற்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதை பயனர்களே முடிவு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்-அப் மட்டுமல்லாமல் வேறு சில செயலிகளிலும் இதே நடைமுறைகள் உள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வாட்ஸ்-அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாட்ஸ்-அப் செயலி மிகவும் பாதுகாப்பானது என தெரிவித்தார். வாட்ஸ்-அப் வணிக கணக்குகள் மட்டுமே கண்காணிக்கப்படும் என்றும், தனிப்பட்ட குறுஞ்செய்திகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.