வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பெரியார் புத்தகங்களை எரித்த சமூக விரோதிகள்! சிறையில் அடைத்த பொலிஸ்-

புதன் சனவரி 13, 2021

பெரியாரின் கடவுள் மறுப்பு, பெண் ஏன் அடிமையானாள் உள்ளிட்ட புத்தகங்களை தீயிட்டு கொளுத்திய இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்திருந்தது. இந்நிலையில் அச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடிய விவசாயிகள், இன்று போகி பண்டிகையையொட்டி தங்களின் எதிர்ப்பை காட்டும் விதமாக வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு கொளுத்தினர்.

வேளாண் சட்டத்திற்கு ஆதரவான விவசாயிகளை கண்டிக்கும் வகையில் கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சியினர், இந்து இறையாண்மைக்கு எதிராக, பெரியாரின் புத்தகங்கள் இருப்பதாக கூறி, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தலைமையில் பெரியார் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களை தடுக்க முயற்சி செய்தபோது, அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெரியார் புத்தகங்களை எரித்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஐந்து நபர்களை, இந்திய தண்டனை சட்டம் 153a, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர், பின்பு அணைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.