வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் போராட்டம்!

புதன் நவம்பர் 13, 2019

பொதுமன்னிப்பு கோரி 3ஆவது நாளாகவும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவர்கள், சிறைச்சாலையின் கூரை மீது ஏறியே தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் ரோயல் பாக் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியது போன்று தங்களுக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

இரண்டு கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நான்கு கைதிகள் இணைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.