வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டுக்கு அனுப்ப கோரிக்கை

புதன் மார்ச் 25, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் கஷ்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு சம்பளத்துடன் அரசு அனுப்ப வேண்டும் என்று ஒருவர் தனது Tweetயில் குறிப்பிட்டுள்ளார்.

மேலே இவர் கூறியது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியாது ஆனால் கொரோனா வைரஸ் நடக்க வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்திப்போம்.

ஒரு நாட்டில் மட்டும் கொரோனா தொற்று இருந்தால் பரவாயில்லை ஆனால் இருப்பதோ சொந்த நாட்டிலும் இப்போது இருக்கின்ற வெளிநாடுகளிலும் …மனைவி பிள்ளைகள் பெற்றோர்களை விட்டு வந்தவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் ?

உண்மையில் இந்த நிலைமை எதிரிக்கும் வரக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டும்.

கொரோனாவுக்கு முதல் உறவினர்கள் அயலவர்கள் நண்பர்கள் நமது குடும்பத்துக்கும் சேர்த்துதான் உதவி செய்தார்கள் (எதாவது பொருட்கள் வாங்குவதற்கு, சமையல், பிள்ளை வளர்ப்பு ) ஆனால் இப்போது அவர்களுடைய குடும்பங்களை பார்ப்பதற்கே அவர்கள் கஷ்டப் படும்போது வெளிநாட்டில் இருக்கும் நமது குடும்பத்துக்கு எவ்வாறு உதவி செய்வார்கள். 

ஊரடங்கு சட்டம் அடிக்கடி போடுவதால் எல்லாப் பொருட்களையும் வாங்கி வைக்க வேணும் என்பதாலும் யாருடைய உதவியும் இல்லாமல் வெளிநாட்டில் இருக்கின்றவர்களின் குடும்பங்கள் நாட்டில் உதவியில்லாமல் படுகின்ற கஷ்டம் சொல்லில் அடங்காது.

வெளிநாட்டில் வேலை நிமித்தம் இருக்கின்றவர்கள் தங்களது குடும்பங்களை இந்த நேரத்திலையாவது கூட இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் கத்தாரை விட்டு வெளியேற முடியாது என்பதாலும் போனால் தங்களது வேலைகளுக்கு என்ன நடக்குமோ என்ற பயத்திலும் அவர்களது கஷ்டங்களை தங்களுக்குள் புதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.