வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வியாழன் நவம்பர் 21, 2019

புலத்சிங்கள பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகல்வோய பகுதியில் நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகஸ் காவல் துறை  ஊடகப்பிவு தெரிவித்தது.

எகல்வோய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல் துறை சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.