வெளிநாட்டவர் சுமார் 230 பேரை நாட்டை விட்டு வெளியேற்றத் தயாராகும் பிரான்ஸ்

திங்கள் அக்டோபர் 19, 2020

பிரான்ஸ் அரசாங்கம் வெளிநாட்டவர் சுமார் 230 பேரை நாட்டை விட்டு வெளியேற்றத் தயாராகி வருகிறது.

தீவிரவாதச் சமய நம்பிக்கை கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அவர்கள், பிரான்ஸ் அரசாங்கத்தின் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் (Emmanuel Macron), மூத்த அமைச்சர்களும் தற்காப்பு மன்றக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது வெளிநாட்டவரை வெளியேற்றுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது.