வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் தனிமைப்படுத்தலில்

சனி ஜூலை 04, 2020

 வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வருகைதந்த 221 பேர் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

தென்கொரியாவில் இருந்து கடந்த 01.07.2020 அன்று  நாட்டிற்கு வருகைந்தன 221 பேர் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 02.07.2020 அன்று இரவ கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நேற்று இரவு 7 பேருந்துக்களில் இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதுடன் இவர்களின் உடமைகள் இரண்டு பார ஊர்திகளில் கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுதல் கண்காணிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 212 ஆண்களும்,06 பெண்களும் 3சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.