வெள்ளரிக்காய் வேர்க்கடலை சாலட்

சனி ஜூலை 31, 2021

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலை புரதச்சத்து வளர்ச்சிக்கு உதவும். நல்ல கொழுப்பும், கனிமங்களும் கொண்டது. இன்று இவை இரண்டையும் வைத்து சாலட் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப்,

கொத்தமல்லி - சிறிது,
விதை நீக்கிய காய்ந்த மிளகாய் - 3,
வெங்காயம் - 1,
வேர்க்கடலை விழுது - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - சிறிது,
தேன் - சிறிது,
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு.

செய்முறை

கொத்தமல்லித்தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேர்க்கடலையை வேகவைத்து கொரகொரப்பாக விழுது போல அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், வேர்க்கடலை விழுது, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, விதை நீக்கிய காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், ஆலிவ் எண்ணெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.


ஊட்டச்சத்து குணங்கள்

வெள்ளரிக்காய் : ஞாபகத்திறனை அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் காக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்தது.

வேர்க்கடலை : இதன் புரதச்சத்து வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் E சருமத்தின் நலம் காக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. நல்ல கொழுப்பும், கனிமங்களும் கொண்டது.

கொத்தமல்லித்தழை கெட்ட கொழுப்பை குறைக்கும். செரிமானத்துக்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் உள்ளது. ரத்த சோகையை சரி செய்யும். மூளை சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

வெங்காயம் : ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் உள்ளது. ஆஸ்துமாவை சரி செய்யும். செரிமானத்துக்கு
நல்லது. வெயில் காலத்தில் வெங்காயம் உண்ணும்போது உடல் சூடு தணியும்.

ஆலிவ் எண்ணெய் : நல்ல கொழுப்பு உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. இதயத்தின் நலனுக்கும் எடை பராமரிப்புக்கும் உதவி செய்யும்.