வெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம் விமான நிலையம் !

செவ்வாய் அக்டோபர் 22, 2019

சிறிலங்காவின்  மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

 உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது. 

 தற்போது நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. 

 இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சிறியளவில் வெள்ளம் நிப்பதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.