வேலணை வங்களாவடியில் கொலைவெறித் தாக்குதல்

புதன் ஜூலை 15, 2020

வேலணைவங்களாவடி  பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டதால் இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது  

 வங்களாவடி பகுதியில் பிரச்சர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர். அதன்போது அவ் இளைஞர்கள் காராசரமாக கேள்விகளைத் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடும் வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது.

 கோபமடைந்த குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் அவ் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த குறித்த இளைஞன் வேலணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.