வேலணையில் நேற்று இரு குழந்தைகள் உட்பட 13 பேருக்கு கொவிட் தொற்று

சனி ஜூலை 31, 2021

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதுடைய பெண் குழந்தைகள் இருவர் உட்பட 13 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரு வயதுடைய பெண் குழந்தைகள் இருவர், ஐந்து வயதுடைய பெண் சிறுமிஉட்பட்டவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 86 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.