வெப்பநிலையை பிறப்பித்து கொரோனா வைரஸீன் செயற்பாட்டை முடக்கும் மாஸ்க்

திங்கள் நவம்பர் 02, 2020

உலகளவில் கொரோனா தொற்றுப் பரவலடைந்து வரும் நிலையில் அமெரிக்காவின் MIT நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றை முடக்கும் வகையில் புதிய வகை மாஸ்க்கை அறிமுகம் செய்யவுள்ளனர் .

முன்னர் பயன்பாட்டில் உள்ள மாஸ்க் வகைகள் கொரோனா வைரஸ் உட்பட நுண்ணுயிர்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியாக இருந்தது . ஆனால் இப்புதிய வகை மாஸ்க்கானது வெப்பநிலையை பிறப்பித்து கொரோனா வைரஸ் உட்பட்ட ஏனைய நுண்ணுயிர்களின் செயற்பாடுகளை முடக்கி பாதுகாப்பு வழங்கக் கூடியதாக உருவாக்கப்படவுள்ளது.

தற்போது இம்மாஸ்க்கான மாதிரி வடிவமைக்கப்பட்டு வருவதுடன் , விரைவில் அசல் மாஸ் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .