வெற்றிகரமாக குணமானவர்களின் ரத்தம்,பிற கொரோனா நோயாளிகளுக்கு மருந்தாக மாறக்கூடும்!

வியாழன் ஏப்ரல் 23, 2020

கொரோனா தொற்றிலிருந்து வெற்றிகரமாக குணமானவர்களின் ரத்தம், பிற கொரோனா நோயாளிகளுக்கு மருந்தாக மாறக்கூடும் என்கிறது சமீபத்திய சில ஆய்வுகள்.

இதற்கு, 1918ல் உலகெங்கும், 'ஸ்பானிஷ் புளூ' என்ற வைரஸ் பரவியபோது மேற்கொண்ட சிகிச்சை முறையை மருத்துவர்கள் ஆதாரமாகச் சொல்கின்றனர்.

ஸ்பானிஷ் புளூ வைரசின் பிடியிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தை, பிற நோயாளிகளின் உடலில் செலுத்தியபோது, அவர்களில் பலர் விரைவில் தேறினர்.

அதேபோல, தற்போது கொரோனாவிலிருந்து மீண்டோரின் ரத்தத்தில், 'கோவிட்-19' வைரசை எதிர்க்கும்,'ஆன்டிபாடி'கள் இருக்கின்றன.

எனவே, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில், கொரோனாவிலிருந்து மீண்டோரின் ரத்தத்தை, நோயாளிகளுக்குத் தரும் பரிசோதனை தொடங்கியிருக்கிறது.

இந்த முயற்சிகள், சோதனையின்போதே நல்ல பலனைத் தரத் தொடங்கியிருப்பதாக, அந்நாடுகளின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், சில வாரங்கள் கழித்தே சோதனையின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதுவரை நாம் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.