வெறுமனே சம்பிராயபூர்வமான உச்சரிப்புக்களை செய்து கொண்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை!!

செவ்வாய் மே 03, 2022

இந்தியாவின், ஆளும் பி. ஜே. பியின் மாநில தலைவர் அண்ணா மலை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பெயரில், இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும்–அவரை,கூட்டமைப்பினர் சந்தித்திருக்கின்றனர். இதன போது, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா உதவி செய்யுமென்றும், அது சாத்தியப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அண்ணாமலை இந்த பொறுப்புக்குப் புதியவர். இதற்கு முன்னர் இந்தப் பொறுப்பில் இருந்தவர்களையும், தமிழர் தரப்புக்கள் சந்த்திருக் கின்றன. சில புலம்பெயர் குழுக்களும் தமிழ் நாட்டு பி. ஜே. பியுடன் தொடர்புகளை பேணிவந்திருக்கின்றனர்.

அப்போதும் இப்படியான உச் சரிப்புக்களுக்கு எவ்வித குறையும் இருந்திருக்கவில்லை.

ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்து வதில் முன்னேற்றகரமான விடயங்கள் எதுவும் இதுவரையில், இடம் பெறவில்லை. குறிப்பாக யுத்தத்துக்குப் பின்னரான, கடந்த 12 வருடங் களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் உச்சரிக்கப்பட்டிருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவும் 13 பிளஸ் என்னும் அடிப்படையில் இந்திய அரசாங்கத்துக்கும் உறுதியளித்திருந்தார். ஆனால், உறுதிய
ளித்தவாறு எந்தவொரு விடயங்களும் இடம்பெறவில்லை.

இந்தப் பின்புலத்தில், மோடி தலைமையிலான பி. ஜே. பி., மத்தியில் பலமாக இருக்கின்ற சூழலில், 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்–அவரின், இலங்கை விஜயத்தின்போது, வலியுறுத்தியிருந்தார்.

ஆனாலும் இந்த விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்று 34 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், இலங்கையை மாறி, மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் எவையுமே, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை.

அதற்கு மாறாக, 13ஆவது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இதன போதும் இந்தியா தலையீடு செய்யவில்லை என்னும் மனக்குறை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. எனினும், இந்தியாவின் தலையீடின்றி, தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமான அரசியல் முன்னேற்றங்கள் ஏற்படாதென்
பதில் தமிழ்த் தேசிய தரப்புக்களிடம் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இல்லை.

ஆனால், மாறுபட்ட மனக்குறைகளும் கவலைகளும் இருக்கின்றன. இந்தளவிற்கு நாம் வலியுறுத்திய போதிலும், சில உச்சரிப்புக்களுக்கு அப்பால், இந்தியா எதனையும் செய்யவில்லையே என்னும் ஆதங்கம் தமிழர் பக்கதிலுண்டு.

இவ்வாறானதொரு சூழலில்தான், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சு வது போன்று, மீண்டும் வழமைபோல் சம்பிரதாய பூர்வமான உச்ச ரிப்புக்களுடன், பி. ஜே. பியின், தமிழ்நாட்டு மாநில தலைவர், 13ஐ உச்சரித்திருக்கின்றார்.

இங்கு கவனிக்க வேண்டிய அடிப்படையான விடயமொன்றுண்டு. அதாவது, யுத்தம் முடிவுற்ற 2009 -மே மாதம், இலங்கை அரசாங்கத்தை பாராட்டி, ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையிலும், 13ஆவது திருத்தச்சட்டம் வலியுறுத்தப்பட்டிருந்தது. 2012இல், அமெரிக்கா இலங்கையின் பெறுப்புக்கூறலை வலியுறுத்தி அழுத்த பிரேரணையொன்றை நிறை வேற்றியது. இதுவரையில் இலங்கையின் மீது, எட்டு பிரேரணகைள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த பிரேரணைகளிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக, 13ஆவது திருத்தச் சட்டமே வலியுறுத் தப்பட்டிருக்கின்றது.

ஆனால், இலங்கையின் சிங்கள அரசியல் சூழலிலோ, இதுவரையில் அது சாத்தியப்படவில்லை.

இந்தியாவின் உதட்டளவு தலையீடுகள் பயனளிக்காது. கடுமையான சில நிலைப்பாடுளை இந்தியா எடுக்க வேண்டும்.

எனவே, ஈழத் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையிருப்பின், தமிழ் நாட்டு பி. ஜே. பியினர், மத்திய அரசாங்கத்துக்கு உரியாவாறான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

வெறுமனே, சம்பிராயபூர்வமான உச்சரிப்புக்களை செய்து கொண்டிருப்பதால், எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

நன்றி-ஈழநாடு