வேதாரண்யம் கடற்கரையில் யாழ் .மீனவர் கரையொதுங்கியுள்ளார்

செவ்வாய் நவம்பர் 24, 2020

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழகம் வேதாரண்;யம்  கடற்கரையில் படகுடன் கரையொதுங்கியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜயமூர்த்தி என்ற 23 வயது மீனவரே படகுடன் கரையொதுங்கியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன


இது தொடர்பில் தமிழக செய்திகள் மேலும் தெரிவிப்பதாவது.

  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விஜயமூர்த்தி (வயது 23). இவர் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் கடல் சீற்றத்துடனும்இ பயங்கர காற்றும் வீசி வருகிறது.

இதனால் காற்றின் வேகத்தால் விஜயமூர்த்தியின் படகு திசை மாறியது. அதிர்ச்சியடைந்த விஜயமூர்த்தி படகை கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கவே நாகை மாவட்டம் வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் படகுடன் விஜயமூர்த்தி கரை ஒதுங்கினார்.

தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று படகு வலையை பறிமுதல் செய்து விஜயமூர்த்தியை கைது செய்தனர்.

காற்றின் வேகத்தில் தான் விஜயமூர்த்தி தமிழக கடற்கரைக்கு வந்தாரா? அல்லது கடத்தலில் ஈடுபட வந்துள்ளாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.