வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து ஈஃபிள் கோபுரம் இரண்டு மணிநேரம் மூடல்!!

புதன் செப்டம்பர் 23, 2020

இன்று புதன்கிழமை நண்பகல் 12:15 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தொலைபேசியில்  விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்தே உடனடியாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
 
பின்னர், ஈஃபிள் கோபுரம் முற்றாக அதிகாரிகளால் தேடப்பட்டது. எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பகல் 2:15 மணிக்கு மீண்டும் ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட்டது.