வெடிப் பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட நால்வர் கைது!

புதன் ஏப்ரல் 24, 2019

வங்காலை கடற்பரப்பில் வெடிப்பொருட்களை பயன்யடுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படையினர் வங்காலை கடற்பகுதியில் நேற்றய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மன்னாரரைச் சேர்ந்த 29 - 37 வயதிற்கிடைப்பட்டவர்களாவர். இவர்களிடமிருந்து

மீன்பிடி படகொன்றும் , வெளி இணைப்பு மோட்டார் மற்றும் 250 கிலோ மீன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.