வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு!

வியாழன் மே 16, 2019

அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள காவல் துறை  நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 

அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை காவல் துறை  நிலையத்தில் ஒப்படைப்பதற்கான கால எல்லை இம்மாதம் 20 ஆம்  திகதி காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை  ஊடகப் பேச்சாளர் காவல் துறை  அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

இதில் அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் வெடிபொருட்களை வைத்திருப்போர் தொடர்பாகவும் அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் அருகில் உள்ள காவல் துறை  நிலைய அதிகாரிக்கு அறிவிக்க முடியும். இதற்கான அறிவுறுத்தல்களும் சகலகாவல் துறை  நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை  ஊடகப் பேச்சாளர் காவல் துறை  அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.