வேட்பாளர்களின் பெயர் பலகைகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அகற்றுவதா?

திங்கள் ஜூலை 13, 2020

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படங்கள் பொறித்த பெயர்ப்பலகைகளை அகற்றுதல் மற்றும் மறைப்பு செய்தல் போன்ற வேலைத்திட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 

unio

வடக்கில் உள்ள சில பிரதேச செயலக உயரதிகாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை  இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடுமாறு பணித்துள்ளனர் எனவும் அச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

இவ்வாறான ஆபத்துமிக்க வேலைகளை நேரடியாக செய்யும்படி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை யாரும் பணிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் க.விக்கினேஸ்வரானந்தன்,   இவ்வாறான செயற்பாடுகளை செய்யும்படி யாராவது அதிகாரிகள் பணித்தால் உடனடியாக தங்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் யாழ்.அரச அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது. 

இக்கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

in