வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்குப்பிணை

புதன் சனவரி 27, 2021

வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்குப்பிணை....
இன்றையதினம் வழக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சுமந்திரன் தலைமையில் வவுனியா சிரேஸ்ட சட்டத்தரணிகள் திரு.அன்ரன் புனிதநாயகம், திரு.குருஸ்,திரு.திருவருள், திரு.தயாபரன்,திரு.யூஜின் ஆனந்தராசா  உள்ளிட்ட பதினாறுக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி வதிட்டார்கள்.

m

வழக்குத்தொடுனர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரமும் கௌரவ மன்றினால் நிராகரிக்கப்பட்டது.

வழக்கு மீண்டும் மேமாதம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இன்றைய வழக்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா கஜேந்திரன் மன்றில் பார்வையாளராக கலந்து கொண்டு குறித்த வழக்கை பார்வையிட்டார்.

வழக்கில் பங்குபற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கு நன்றிகள். நீதிக்கான பயணம் தொடரட்டும்.