விசுவமடு தேராவில் துயிலும் இல்லக் காணியில் அத்துமீறி எல்லைக்கல் நாட்டிய வன ஜீவராசிகள் திணைக்களம்!

புதன் ஜூன் 03, 2020

விசுவமடு தேராவில் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் சற்று முன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அத்துமீறி எல்லைக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப்பகுதிகளில் பல இடங்களில் வன ஜீவராசிகள் திணைக்களம் அத்துமீறிச் செயற்பட்டுவரும் நிலையில் இன்று தேராவில் துயிலும் இல்லத்திலும் எல்லைக்கல்லை நாட்டியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.