வீரிய ஒட்டு எதிர்ப்பணுக்கள்!!

சனி மே 16, 2020

நெதர்லாந்தை சேர்ந்த வாகெனிகன் பல்கலைக்கழக மருத்துவர்கள், வைரஸ் கொல்லி சிகிச்சையில் ஒரு புதுமையை உருவாக்கியுள்ளனர். மனித உடலில், வைரஸ்களை எதிர்க்கும் 'ஆன்டிபாடி' என்ற புரத எதிர்ப்பணுக்கள் உற்பத்தியாகின்றன.

பலவகையான எதிர்ப்பணுக்களில் ஒவ்வொன்றும், உடலில் நுழையும் கிருமியின் வெவ்வேறு பகுதியை தாக்கி தடுக்கும் திறன்கொண்டவை. இருவேறு புரத எதிர்ப்பணுக்களை ஒன்றாக இணைத்தால், அவை வீரியமாக செயல்படும் என்பதால், அவற்றை இணைக்கும் பசை போன்ற ஒரு புரதத்தை வாகெனிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

இப்படி பசையால் ஒட்டப்பட்ட எதிர்ப்பணுக்களை, பலவகை வைரஸ்களை வீரியமாகத் தாக்கி செயலிழக்கச் செய்யும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.