வீதி ஒழுங்கை சட்டத்தை மீறினால்.. - ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

திங்கள் செப்டம்பர் 21, 2020

வீதி ஒழுங்கை சட்டம் இன்று (21) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனை மீறும் ஓட்டுனர்களுக்கு எதிராக எந்தவொரு தண்டப்பணமோ நீதிமன்ற நடிவடிக்கைகளோ முன்னெடுக்கப்பட மாட்டாது என போக்குவரத்து காவல்துறை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறும் ஓட்டுனர்களுக்கு தௌிவூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் வீதி ஒழுங்கை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் ஹைலெவல் வீதி, கண்டி வீதி, காலி வீதி மற்றும் ஶ்ரீஜயவர்தன புர வீதி ஆகியவற்றில் இவ்வாறு வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.