வீதி விபத்து ! குடும்பஸ்தர் பலி!

ஞாயிறு ஏப்ரல் 14, 2019

சித்திரை புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வீதி விபத்து காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினை சேர்ந்த 38 வயதான ம.புவிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் இன்று மாலை மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்