வீட்டில் செய்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த மாணவர்

வெள்ளி மே 20, 2022

சிங்கப்பூரில் பதின்ம வயது பொறியியல் மாணவர் ஒருவர், இரண்டு நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து அவற்றில் ஒன்றை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் பற்றவைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். 

2020ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நடந்தது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அந்த இளையர், உரிமமின்றி வெடிகுண்டுகளைத் தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

பலதுறைத் தொழிற்கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் படிக்கும் அவருக்குத் தற்போது வயது 19.

அவர் கவனக் குறைவு, அதீதச் செயலாக்கக் குறைபாடு, ஒழுக்கக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகிறார்.

COVID-19 காலத்தில் வீட்டில் இருந்தபோது வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று அவர் இணையத்தில் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கிறார். 

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டது பற்றித் தகவல் அறிந்த காவல்துறையினர், இளையர் ஒருவர் வெடிபொருள்கள் குறித்து Instagram-இல் பதிவு செய்வதாகத் தகவல் பெற்று இளையரை அவரது வீட்டில் கைது செய்தனர்.