வீட்டில் பெண் பிள்ளை உள்ளார்கள்;ஓட்டு கேட்டு வராதீர்கள்’அதிமுக - பா.ஜ.க!

செவ்வாய் மார்ச் 12, 2019

தேர்தல் நேரத்தில் எது நடந்தாலும் அரசியலாகிவிடுகிறது.   அந்தப் பொள்ளாச்சி வீடியோவும், இளம்பெண்களைச் சிதைத்த கும்பலின் அரசியல் பின்னணியும் தமிழக மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது.

இது போதாதா? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி, அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைக் காலில் போட்டு மிதித்தவர்களுக்கு எதிராக, பொள்ளாச்சி சம்பவத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் காரியத்தில் சிலர் இறங்கிவிட்டனர்.

இதன் வெளிப்பாடாக, சமூக வலைத்தளங்களில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருக்கின்றனர்.
 
ஒரு வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருக்கிறது அந்த போர்டு. அதில்,  ‘வீட்டில் பெண் பிள்ளை உள்ளார்கள். அதிமுக – பா.ஜ.கவினர் ஓட்டு கேட்டு வராதீர்கள். நீதி வேண்டும் பொள்ளாச்சி கற்பழிப்பு’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.  
 
சிறீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி இறந்ததும்,   மொத்த பழியும் திமுக மீது விழுந்தது.  அந்தத் தேர்தலில், தமிழகத்தில் வெற்றி வாகை சூடியது அதிமுக. காலம் திரும்பியிருக்கிறது.

இது பழியல்ல! பொள்ளாச்சியில்,தங்களுக்குப் பின்னால் அதிகார பலம் கொண்ட ஆளும் கட்சியினர் சிலர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில். பெண்களை வேட்டையாடினார்கள் சில இளைஞர்கள்.

அதன் விளைவை இந்தத் தேர்தலில் அதிமுகவும் பா.ஜ.க.வும் சந்தித்தாக வேண்டும் என்ற ஆதங்கம்தான், சமூக வலைத்தளங்களில் பதிவுகளாகி வருகின்றன.