வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்;தவிக்கும் தமிழக மீனவர்கள்!

சனி ஓகஸ்ட் 24, 2019

சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடலில் வான் முட்டும் அளவுக்கு உயர்ந்தெழும் அலையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மீனவர்களை அச்சுறுத்தி வருகிறது.

இதில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100-க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

111

இதனால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடல் வெள்ளம் புகுந்த அந்த வீடுகளில் கடல் மணல் குவியல் குவியலாக உள்ளன. இதனால் அந்த மணல் குவியல்களை அப்புறபடுத்தாமல் வீடுகளில் தஞ்சம் அடைய முடியாது.

எனவே மீனவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக மணல் குவியல்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இருந்தாலும் அவர்களால் அப்புறபடுத்த முடியவில்லை. மேலும் மாவட்ட நிர்வாகமும் இதை கண்டுகொள்ள வில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறும் போது…இந்த பகுதிகளில் தூண்டில் வளைவு கேட்டு அரசிடம் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

ஆனால் அரசு அதை செவி கொடுத்து கேட்க வில்லை. எதாவது சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் உடனே தூண்டில் வளைவு அமைத்து தருகிறோம் என கூறி விட்டு செல்வார்கள்.

அதன்பிறகு இந்த பக்கம் வருவது இல்லை அதனால் அடிக்கடி கடல் கொந்தளிப்பால் கடல் நீர் வீட்டுக்குள் வந்து விடுகிறது. இனியாவ து அரசு மெத்தனம் காட்டாமல் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றனர்.