விஜய்சேதுபதி பேசப் போகும் காட்சிக்காகக் காத்திருக்கிறேன்!!

வெள்ளி அக்டோபர் 09, 2020

விஜய்சேதுபதி நல்ல நடிகர். பல்வேறுபட்ட பாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

‘முரளி 800’ திரைப்படத்தில் இனப்படுகொலையை வக்கிரமாக ரசித்த ஒருவனாக அரச பயங்கரவாதிகளுக்காக இனப்படுகொலையை மூடி மறைத்த  மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்த போர்க் குற்றவாளிகளுடன் கொஞ்சிக் குலாவியதென்று ஒரு சவாலான பாத்திரத்தை விஜய்சேதுபதி எப்படி வெளிப்படுத்தப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

குறிப்பாக ‘2009 மே 18 தான் எனது வாழ்வின் மகிழ்ச்சியான நாள்’ என்று விஜய்சேதுபதி பேசப் போகும் காட்சிக்காகக் காத்திருக்கிறேன்.