விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிக்கை

வெள்ளி செப்டம்பர் 18, 2020

 பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகள் நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாடசாலை விளை யாட்டு நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள அதி பர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்குத் தெளிவு படுத்துவதற்கு தற்பொழுது,

அனைத்து மாகாண கல்வி அதிகாரிகள் விளையாட்டு சங்கங்களின் முக்கியஸ்தர் களுக்குத் தெளிவுபடுத்து வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுடன் ஒன்றிணைந்து இந்த ஆலோசனை கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஏற் பட்டுள்ள அனர்த்த நிலையைக் கவனத்தில் கொண்டு 4 பிரிவுகளின் கீழ் இந்த ஆலோசனைகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

விளையாட்டு நடவடிக்கையின் போது கைகளைக் கழுவு தல் மற்றும் சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை முன்னெடுத்தல் போன்ற அடிப்படை ஆலோசனைகளுக்கு மேலதிகமாக விளை யாட்டு மைதானங்களில் பிரவேசிப்போருக்கு போதுமான சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் இதன் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விளையாட்டு இடம்பெறும் சுற்றாடலில் உணவு விற்பனை மற்றும் உணவை விநியோகிக்கும் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பு விடயங்களை உரிய முறையில் முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் குறித்த ஆலோ சனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.