விழிப்­புடன் மக்கள் இருக்க வேண்டும்!‘

புதன் நவம்பர் 13, 2019

கடந்த காலங்­களில் ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டிப் புதைத்த அடக்­கு­மு­றை­யா­ளர்கள் குறித்து சிறு­பான்மை சமூகம் விழிப்­புடன் செய­லாற்ற வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

களுத்­துறை, பேரு­வளை, தர்கா நகர், அட்­டு­லு­கம, பாணந்­துறை- மற்றும் தொட்­ட­வத்தை ஆகிய பிர­தே­சங்­களில் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் அமைச்சர் உரை­யாற்­றினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இன­வா­தத்­துக்கு தீனிபோட்டு வளர்த்­த­வர்கள் தேர்­தலில் வெல்­லு­வ­தற்­காக நம் மீது பரிவு காட்­டு­கி­றார்கள். அன்பை செரி­கின்­றனர். அர­வ­ணைக்­கின்­றனர். இந்த நடி­கர்­களின் பசப்பு வார்த்­தை­களில் ஏமாறி விடா­தீர்கள். பெறு­ம­தி­யான வாக்­கு­களை சீர­ழித்து விடா­தீர்கள்.

வர்த்­த­கர்கள் சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு சமூ­கத்தின் ஏழ்­மையை பயன்­ப­டுத்தி, பணத்தை கொட்டி வாக்­கு­களை பெறு­வ­தற்கு பிர­யத்­தனம் செய்­கின்­றனர்.  மிகவும் தந்­தி­ர­மாக நமக்குள் ஊடு­ருவி சாதிக்க பார்க்­கின்­றனர்.

பெரும்­பான்மை இனத்தின் மன­நி­லையைப் புரிந்து கொண்டு சிறு­பான்­மை­யினம்  வாக்­க­ளிக்க வேண்டும் என அச்­சு­றுத்தி பெர­மு­ன­வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கோரு­கின்­றனர். இந்த முகவர்களின் கூற்றில் எந்­த­வி­த­மான தர்க்­கமும் இல்லை.இந்த கூட்­டத்­தி­னரின் கடந்த கால ஆட்சி, நிர்­வாக முறை, ஜன­நா­யகம் தொடர்­பான இவர்­களின் செயற்­பா­டுகள் அனைத்தும் உங்­க­ளுக்கு தெரியும். முதல் ஐந்து வரு­டத்தில் காட்­டிய நிதானம் அடுத்த ஐந்து வரு­டத்தில் காணாமல் போய் விட்­டது.

அதி­கார மம­தையும் வக்­கிர புத்­தியும் மேலோங்­கி­ய­தையும் மறந்து விட மாட்­டீர்கள். சிறு­பான்மை மக்­களை துளி­ய­ளவும் கணக்கில் எடுக்­காத இவர்­களின் செயற்­பாடு தான் இன­வா­தத்­துக்கும் மத­வா­தத்­துக்கும் உயிரூட்­டி­யது.  

பேரு­வளை, அளுத்­கமை, தர்கா நகர்,  ஆகிய இந்த பிர­தே­சங்­களே இந்த வாதங்­க­ளுக்கு முதலில் இரை­யா­னது. உங்­களை இலக்கு வைத்து எல்­லா­வற்­றையும் அழித்­தனர் இதனால் உங்­களின் துன்­பங்­க­ளிலே ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கமும் கவலை கொண்­டது. கையேந்தி பிரார்த்­தித்­தது. கண்ணீர் வடித்­தது. ஆனால் இங்­குள்ள சில அர­சியல் வாதிகள் அவற்றை எல்லாம் மறந்து உங்­களை பிழை­யாக வழி நடத்தப் பார்க்­கின்­றனர். உங்­க­ளுக்­காக குரல் கொடுத்த, அமைச்­ச­ர­வை­யிலும் பாராளு­மன்­றத்­திலும் போரா­டிய முஸ்லிம் தலை­மைகள் தொடர்பில் இந்த பிராந்­தி­யத்தில் உள்ள மொட்டு அர­சியல் வாதிகள் சிலர் சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான கருத்தை விதைக்­கின்­றனர்.

நாட்டின்  ஒரு­மைப்­பாட்டை விரும்­பி­ய­த­னா­லயே நான் உட்­பட வடக்கு முஸ்லிம் சமூகம் அடித்து விரட்­டப்­பட்டோம் என்­பதை மொட்டு முஸ்லிம்  அர­சியல் வாதிகள் ஞாப­கத்தில் வைத்­துக்­கொள்ள வேண்டும். எனவே நீங்கள் இவர்­களின் பிழை­யான வழி­காட்­ட­லுக்குள் சிக்கி விடாமல் சமூ­கத்தை முன்­நி­றுத்தி வாக்குகளை அளியுங்கள்.

இந்த கூட்டங்களில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான களுத்துறை நகர சபை உறுப்பினர்  ஹிஸாம் மற்றும் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹசீப், மரிக்கார், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் உட்பட பலர் உரையாற்றினர்.