விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்!

சனி அக்டோபர் 19, 2019

அமெரிக்காவில் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜில் விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 39 பேர் பயணித்த விமானம் நேற்று தரையிறங்கு நேரத்தில ஒடுபாதையை விட்டு விலகி விபதத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போதே ஓடு  பாதையை தாண்டி அருகில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

உடனடியாக மீட்பு பணியினர் விரைந்து செயல்பட்டு பயணிகளை மீட்டனர். அத்தோடு விமானத்தில் இருந்த பயணிகளில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.