விமலேஸ்வரியிடமிருந்து ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கோருகின்றார் சுமந்திரன்

ஞாயிறு ஜூலை 12, 2020

 இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மகளிர் அணியின் முன்னாள் செயலாளர் சி.விமலேஸ்வரியிடம் 1000 கோடி ரூபா மான நஷ்டம் கோரிக் கடிதம் அனுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். 

 கரவெட்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பதின்நான்கு நாட்களுக்குள் அவரிடம் இருந்து பதில் கிடைக்கப் பெறாத பட்சத்தில் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.