விஞ்ஞானியே தற்கொலைக்கு முயன்ற சம்பவம்- ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் மறுபக்கம்!

வெள்ளி சனவரி 08, 2021

வாழ்க்கையில் வெற்றி கொண்ட மனிதர்தளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதே மனிதன் சில காலங்களில் தோல்வியுற்றதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே சமயத்தில் மாபெரும் வெற்றியையும் மிக மோசமான தோல்வியையும் காண முடியாது அப்படி இரண்டையும் அனுபவித்த நபர் ஸ்டீபன் ஹாக்கிங்காக மட்டுமே இருக்க முடியும்

1980 ம் ஆண்டு முதல் 1985 ஆண்டு காலங்களில் ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் உலமெங்கும் வேகமாக பரவத் தொடங்கியது அந்த கால கட்டங்களில்தான் தனது 'A Brief History of Time' என்ற புத்தகத்தை எழுத ஆரம்பித்தார் 

கல்லூரிக் காலங்களில் அவரைக் காதலித்து அவருக்கு உடலியல் பக்கவாத நோய் இருக்கின்றது தெரிந்தும் அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த ஜேன் இன்னொரு நபருடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதை ஸ்டீபன் தெரிந்து கொண்டது இந்த நேரத்தில்தான் 

1965 ம் ஆண்டு ஜேனைத் திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவும் ஆகியிருந்தார் ஸ்டீபன் தன் உடல் மோசமான நிலையில் இருந்தாலும் மனைவி பிள்ளைகளென மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்த ஹாக்கிங்க்கு தன் மனைவி இன்னொருவருடன் தொடர்பில் உள்ளார் என்ற செய்தி தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது 

தன் சோகத்தைக் கூட வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் ஜடம் போல் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தார் தனிமையின் விரக்தி அவரை துரத்த ஆரம்பித்து 

1985 ம் ஆண்டு ஒரு அறிவியல் மாநாட்டுக்கு சென்றிருந்த வேளையில் மயக்கமடைந்து விழுந்து விடுகிறார் ஹாக்கிங் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரைக் காப்பாற்ற வேண்டுமானால் அவரது தொண்டையில் ஆப்ரேசன் செய்து நிரந்தரமாக துளையிட வேண்டும் எனவும் அதன் பிறகு அவரால் பேசவே முடியாது எனவும் கூறிவிடுகின்றனர் 

அதுவரை சிரமப்பாடாது பேசி வந்த ஹாக்கிங்ற்கு அது இரண்டாவது பேரடியாக இருந்தது விரக்தியின் உச்சிக்கே சென்றார் ஸ்டீவன் அப்போதுதான் முதன்முதலாக தற்கொலை செய்ய முயல்கிறார் 

வெற்றியின் உச்சியில் இருந்த மாபெரும் மனிதர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது அதுவும் அறிவியல் உலகிற்கு கிடைத்த மாபெரும் விஞ்ஞானி அப்படியொரு நிலைக்கு போவாரென்று யாராலும் நம்ப முடியவில்லை அதை நினைத்து அனைவரும் மனம் கலங்கினர் 

தான் தற்கொலைக்கு முயன்றதாக ஹாக்கிங்கே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்-

கைகளையும் கால்களையும் அசைக்க முடியாத ஒருவரினால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் அவரால் முடிந்ததெல்லாம் தன் மூச்சை தானே அடைத்துக்கொள்வது மட்டும்தான் அதைதான் செய்து தற்கொலைக்கு முயன்றார் ஸ்டீவன் 

ஆனால் அவரது மூளை அதற்கு இடம் கொடுக்கவில்லை அவரையும் மீறி உடைத்துக்கொண்டு வெளியே வந்தது மூச்சு தற்கொலைக் கூட செய்ய முடியவில்லையே என்ற தனது நிலையை நினைத்தும் தனது தனிமையின் நிலையை நினைத்தும் அழ ஆரம்பித்தார் அவர் 

1990 ம் ஆண்டு அவரது மனைவி ஜேன் அவரை விட்டு பிரிந்து சென்றார் அந்த நேரத்தில் அவருக்கு தாதியாக பணி செய்ய வந்திருந்த எலீனாவைத் திருமணம் செய்து கொண்டார் ஹாக்கிங் 

எலீனாவுடன் பதினொரு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் ஹாக்கிங் 2006 ம் ஆண்டு அந்த உறவும் முடிந்து முறிந்து போனது அதன் பின்னர் இறுதி மூச்சு வரை தனிமையிலையே தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஹாக்கிங் 

தன் கை கால்கள் உடல் என எதையும் அசைக்க முடியாமல் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் கண் அசைவால் இப்பிரபஞ்சத்தையே ஆய்வுசெய்தவர் ஸ்டீவன் 

21ம் நூற்றாண்டின் மாபெரும் அதிசயம் அதுமட்டுமல்ல மாபெரும் பொக்கிசம் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.